இயற்கையாக காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா: நிரந்தரமான தீர்வு இதோ
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.
ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
இந்தப் பதிவில் முடி வளர்ச்சியை அதிகரிக்க வைக்கும் இலகுவான வழிமுறைகள் சிலவற்றை பார்க்கலாம்.
தயிர்
தயிர் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான மூலப்பொருளை கொண்டுள்ளது.
இதில் வைட்டமின் பி உள்ளது. மேலும் கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது முடியின் மயிர்க்கால்களுக்கு அவசியமானவை. வலுவானவை, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்கின்றன.
ஒட்டுமொத்த முடி ஆரோக்கியம் பெறுவதற்கு தினசரி உணவில் ஒரு கப் தயிர் சேர்த்து வருவது நன்மை பயக்கும்.
முடியை ட்ரிம் செய்யவும்
மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமையானது அதிகரிக்கும்.
எப்படியெனில் முடியானது வளரும் போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாழாகிறது.
இதனால் முடியின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. ஆகவே மாதம் ஒருமுறை முடியை லேசாக ட்ரிம் செய்ய வேண்டும்.
ஆயில் மசாஜ்
முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும்.
இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது.
அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.
ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.
கீரைகள்
பசலைக் கீரை, முட்டைக்கோஸ் மற்றும் பிற அடர் இலை கீரைகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன, அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கும் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அவசியமானவை.
இந்த கீரைகள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வெப்பமான, ஈரப்பதமான மாதங்களில் முடி நுண்குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
முடி வளர்ச்சி மற்றும் அடர்த்திக்கு பருவகாலத்திற்கு ஏற்ற இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது, வருடத்தின் எந்த நேரத்திலும் உங்கள் தலைமுடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
