கல்வி முறையை சீர்குலைக்க எவருக்கும் இடமளியேன் - ரணில் சூளுரை
Matara
Ranil Wickremesinghe
Sri Lanka
By Vanan
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (25) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவைக் குழு
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அதிபர், அதில் தானும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்கி, சர்வதேசத்தில் இலங்கையின் பெயர் உயர்ந்த நிலையில் வைக்கப்படும் எனவும் அதிபர் இதன்போது கூறினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி