ஈழத்திலும் கமலஹாசன்களும் ஏ.ஆர்.ரஹ்மான்களும் பிரபுதேவாக்களும் பிறந்து விட்டார்கள் - முதல்வர் புகழாரம்!

Tamil Cinema Jaffna Sri Lanka Viswalingam Manivannan
By Kalaimathy Nov 01, 2022 06:57 AM GMT
Report

ஈழத்திலிருந்தும் உலகத்தரம் வாய்ந்த சினிமா படங்களை உருவாகக் முடியும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத்தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகின்றது. இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாகவும் யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஈழத்து சினிமா கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வான 'குவியம் விருதுகள் 2022' இல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“நான் பெரிதாக சினிமா பார்ப்பது கிடையாது. இன்று இங்கு திரையிடப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது இந்த மண்ணிலே கமலஹாசன்களும், ஏ.ஆர்.ரஹ்மான்களும், பிரபுதேவாக்களும் பிறந்து விட்டார்கள் என எண்ணத்தோன்றுகின்றது.

வர்த்தக ரீதியான சினிமா

ஈழத்திலும் கமலஹாசன்களும் ஏ.ஆர்.ரஹ்மான்களும் பிரபுதேவாக்களும் பிறந்து விட்டார்கள் - முதல்வர் புகழாரம்! | Eelam Cinima Hollywood Indian Cinima Tamil Cinima

மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது. உண்மையிலேயே ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத்தொடங்கியிருக்கின்றது என்று தான் நான் நினைக்கின்றேன்.

அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். சினிமா மீதான பற்றுக்காரணமாகவும் ஆர்வம் காரணமாகவும் நீங்கள் இந்த செயற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும் இதன் மூலம் பெரியளவில் வருமானம் ஈட்ட முடியாது என நான் நினைக்கின்றேன்.

எதிர்காலத்திலே வர்த்தக ரீதியான சினிமாவையும் இங்கு உருவாக்க வேண்டும். இந்த துறையில் நின்று பிடிப்பது என்பது தான் மிக முக்கியமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

எங்களுக்குள்ளும் கலைஞர்கள் இருக்கிறார்கள், திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும். ஈழத்தில் இருந்தும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

ஈழத்து சினிமா கலாசாரத்தை சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது

ஈழத்திலும் கமலஹாசன்களும் ஏ.ஆர்.ரஹ்மான்களும் பிரபுதேவாக்களும் பிறந்து விட்டார்கள் - முதல்வர் புகழாரம்! | Eelam Cinima Hollywood Indian Cinima Tamil Cinima

நம்பிக்கையோடு போராடுங்கள். நிச்சயம் சிகரம் தொடுவீர்கள். ஈழத்து சினிமாவை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு போராடிக்கொண்டிருக்கும் அத்தனை கலைஞர்களிடமும் ஒரு வேண்டுகோளை நான் விடுக்கின்றேன்.

சினிமாவில் நல்லதும் இருக்கின்றது கெட்டதும் இருக்கின்றது. சினிமா எங்களை வளப்படுத்தவும் முடியும் அழித்தொழிக்கவும் முடியும். சினிமா எங்கள் பண்பாட்டை சிதைத்துவிடும், உரிமைக்கான எம் தாகத்தை தணித்து விடும் என்ற காரணத்திற்காக ஒரு காலத்தில் இங்கு இந்திய சினிமா படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன.

யுத்தத்திற்கு பின்பு எங்கள் சமுதாயம் பண்பாட்டை இழக்கின்றதா? கலாசாரத்தை இழக்கின்றதா? என்ற கவலை எல்லோர் மனதிலும் எழுந்து நிற்கின்றது. இந்த சினிமா எங்கள் பண்பாட்டை, கலாசாரத்தை சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது.

கலைஞர்களுக்கு விருது

ஈழத்திலும் கமலஹாசன்களும் ஏ.ஆர்.ரஹ்மான்களும் பிரபுதேவாக்களும் பிறந்து விட்டார்கள் - முதல்வர் புகழாரம்! | Eelam Cinima Hollywood Indian Cinima Tamil Cinima

மாறாக எம் சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் முகமாக ஈழத்து சினிமாவை கட்டமைக்க வேண்டும். எதிர்கால சந்ததியை வளர்த்தெடுக்கும் விதமாக இந்த சினிமாவை நாங்கள் பயன்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான குவியம் விருது விழாவில் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 28 கலைஞர்களுக்கும் விருது வழங்கி வைக்கப்பட்டதுடன், 17 சினிமா கலைஞர்களுக்கு விசேட விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாது ஈழ சினிமா துறையில் பல வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரான்சிஸ் ஜூல்ஸ் கொலினுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026