மதுரை மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தை தவிர்த்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் (Madurai) கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) உட்பட கட்சியின் உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
விஜய்யின் அரசியல் வருகை என்பது ஆரம்பத்திலிருந்து பாரிய சர்சசைகளுக்குள் சிக்கி வருகின்ற நிலையில் முதல் மாநாட்டை அடுத்து அது மிகவும் அதிகரித்திருந்தது.
இந்தநிலையில், முதல் மாநாட்டை தாண்டி இரண்டாவது மாநாட்டில் விஜய் ஆற்றும் உரை குறித்த பாரிய எதிர்ப்பார்ப்பு உலக தமிழர்களிடையேயும் மற்றும் தமிழக அரசியல் பரப்பிலும் வலுவாக காணப்பட்டது.
இதில் எதிர்பார்க்கப்பட்ட பல விடயங்களில் முக்கியமாக கருதக்கூடிய ஒரு விடயம்தான் ஈழத்தமிழர்கள் குறித்த விஜய்யின் கண்ணோட்டம்.
காரணம், தமிழக வெற்றி கழகத்தினால் முன்வைக்கப்பட்ட 26 முக்கிய தீர்மானங்களில் “ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம்” எனும் ஒரு தீர்மானமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தமிழக கடற்றொழிலாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த விஜய், ஈழத்தமிழர்கள் குறித்தும் தமது நிலைபாட்டை முன்வைப்பார் என புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உட்பட இலங்கை தமிழர்களும் எதிர்ப்பார்த்திருந்தனர்.
இது மட்டுமன்றி விஜய்யின் தந்தை ஈழத்தமிழர்கள் மீதான அதீத கரிசணை கொண்டவர் என்பதுடன் விஜய்யின் மனைவியும் ஒரு ஈழத்தமிழர் என்பதனால் ஏதாவது ஒரு வகையில் ஈழத்தமிழர்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டை அவர் முன்வைப்பார் என்ற பாரிய எதிர்ப்பார்ப்பு வேரூன்றி காணப்பட்டது.
இந்தநிலையில், அவ்வாறான உரைகள் ஏதும் நிகழ்த்தப்படவில்லை என்பது ஈழத்தமிழர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து உள்ளது காரணம் தற்போது தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான (செம்மணி, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான தொடர் போராட்டங்கள் மற்றும் தமிழர்களின் உரிமை கோரல்கள்) என்பவை குறித்து இவ்வாறு அயல் நாடுகளிலும் ஏன் சர்வதேச தரப்பிலும் பேசப்படுவதால் தமிழர்களுக்கான பாரிய பாதுகாப்பு வலைப்பிண்ணல் ஒன்று உருவாகுவதற்கு அது வழிவகுக்கும்.
இதனடிப்படையில் தமிழக தரப்பை தாண்டி இலங்கையிலும் விஜய்யிற்கான இளம் தலைமுறையினர் ஆதரவு என்பது பலமாக காணப்படுகின்ற நிலையில் ஈழத்தமிழர்கள் குறித்த விஜய்யின் நிலைப்பாடு மிகவும் பாரிய எதிர்ப்பார்ப்பாக காணப்பட்டது.
இந்தநிலையில், தமிழக வெற்றிக கழக விஜய் ஈழத்தமிழர்கள் குறித்த கருத்தை புற்க்கணித்தமைக்கான காரணம், அவர் ஈழத்தமிழர்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டியதன் தேவை, ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்களை உள்ளடக்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

