ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் வெளியீடு இன்று

Sri Lankan Tamils Chennai India
By Sathangani Jan 03, 2025 07:46 AM GMT
Report
Courtesy: ஊகி

ஈழ விடுதலைக்காக பெருங்களங்கள் பல கண்ட ஈழத் தளபதியின் கதையை மையமாக வைத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் இன்று வெளிவரவுள்ளது.

இன்று (03.01.2025) மாலை 6 மணிக்கு வெளியீட்டு விழா நிகழ்வுகள் சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெறவுள்ளது.

நடுகல், பயங்கரவாதி நாவல்கள் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வன் சயனைட் நாவலை தனது மூன்றாவது நாவலாக எழுதியுள்ளார்.

சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

பங்கேற்கவுள்ள பல்லாளுமைகள்

சயனைட் நாவல் வெளியீட்டில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்துறை பல்லாளுமைகள் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் வெளியீடு இன்று | Eelam Writer Theepachchelvan Novel Relase In India

நிமால் விநாயகமூர்த்தி ஆதரவில் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாட்டில் பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதி ஒருவரின் கதையாக சயனைட் நாவல் அமைந்துள்ளதாக அந்நாவல் வெளியீட்டின் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம் பெயர் பிரதிநிதி நிமால் விநாயகமூர்த்தி, ஃபெட்னா மேனாள் தலைவர் பாலா சுவாமிநாதன், மற்றும் கால்டுவெல் வேள்நம்பி, இயக்குநர் சீனு ராமசாமி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஓவியர் மருது, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் மண்குதிரை ஆகியோர் சயனைட் நாவல் வெளியீட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக பாலமுரளிவர்மன் பங்கெடுக்கவுள்ளார். நாவல் பதிப்பாளராக வேடியப்பன் இருக்கின்றார்.

கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஈழ விடுதலைப் போராட்டம்

ஈழ விடுதலை போராட்டத்தின் மதிப்பு மிக்க ஒரு குறியீடாக சயனைட் ஈழப்போராளிகளால் நோக்கப்பட்டிருந்தது.

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் வெளியீடு இன்று | Eelam Writer Theepachchelvan Novel Relase In India

ஈழத்தமிழரின் இருப்புக்கான விடுதலைப் போராட்டத்தினை நடந்திய ஈழப்போராளிகள் எதிரியிடம் உயிரோடு பிடிபட்டு விடக்கூடாது என்ற உயரிய கடப்பாட்டினை பேணி வந்திருந்தனர். அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் வகையில் தங்கள் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்திருந்தார்கள்.

உலக வரலாற்றில் தகவல் காப்பிற்காக கட்டமைக்கப்பட்ட முறையில் சயனைட் நஞ்சு பயன்படுத்தப்பட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் மாத்திரமே என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

வலி மிகுந்த போராட்டத்தில் பலவீனமான மனித உடலின் பலவீனமான மனித மனங்களின் பலமான தகவல் பாதுகாப்பு ஆயுதமாக ஈழப்போராளிகள் சயனைட்டினை பயன்படுத்தியிருந்தனர்.

ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026