மீண்டும் உயர்ந்த முட்டை விலை
கடந்த வாரம் 28 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்ட முட்டையின் விலை, இந்த வாரம் 04 முதல் 06 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி தற்போது, இலங்கையின் பல பகுதிகளிலும் ஒரு முட்டையின் விலை 32 முதல் 34 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலம் ஆரம்பித்துள்ளதுடன் முட்டைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
முட்டை விலை
கோழிப்பண்ணை விவசாயிகள் முட்டை விலையை உயர்த்தியுள்ளதாகவும், இதன் விளைவாக, வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்றும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தையில் ஒரு முட்டையின் விலை 25 ரூபாயாகக் குறைந்திருந்தது.
மேலும், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
