தலைவர் தெரிவிலேயே உடன்படாதவர்கள்.......
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரை தேர்வு செயவதற்கான தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
என்றுமில்லாதவாறு இம்முறை மும்முனைப்போட்டி நடைபெறவுள்ளது.
அதாவது வடக்கில் இருந்து ஒருவர் கிழக்கில் இருந்து ஒருவர் வடக்கை தனது பூர்விகமாக கொண்டு தற்போது கொழும்பை வசிப்பிடமாக கொண்டவர் என அந்தப்போட்டி அமைந்துள்ளது.
தமிழரசுக்கட்சி இப்போது யாரின் கட்டுப்பாட்டில்
தமிழரசுக்கட்சி இப்போது யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற சந்தேகம் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது என்னமோ உண்மைதான். தற்போதைய தலைவர் பெயரளவிலேயே இருக்கும் நிலையில் ஆளாளாளுக்கு தம் இஷ்டப்படி நடந்து கொள்வதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் யாருக்கு பின்னால் சென்றால் தமக்கு ‘சீற்’ கிடைக்கும் என்ற நிலையில் பலமானவர்களை ஆதரிக்கும் நிலையிலேயே தொண்டர்கள் உள்ளனர்.இதில் தமிழ் மக்களை பற்றி எவரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.
சரி அதுபோகட்டும் கட்சியின் கட்டுக்கோப்பை பேண, பாதுகாக்க போட்டியிடும் மூவரும் கலந்து பேசி ஒரு முடிவிற்கு வாருங்கள் என பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் சம்பந்தன் சொல்லியும் மூவரும் பேசியும் எந்த முடிவிற்கும் வரவில்லை.
இணக்கத்திற்கு வராதவர்கள்
விளைவு வழமைக்கு மாறாக கட்சியின் தலைவரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு.
அப்படியென்றால் இந்த தலைவர் தெரிவிற்கே ஒரு முடிவிற்கு , இணக்கத்திற்கு வராதவர்கள் நீண்டு புரையோடிப்போன தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையையா தீர்த்து வைக்கப்போகின்றார்கள் என மக்கள் நக்கலாக கேட்பதுவும் ஒரு வகையில் சரிபோலத்தான் படுகிறது.