மின்கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்
இலங்கை மின்சார சபை (CEB) 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக (Sanjeewa Dhammika), இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 சதவீத கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), மின்சார சபையின் 200 பில்லியன் ரூபாவில் இருந்து 51 பில்லியன் ரூபாவை ஆறு மாத காலத்திற்குப் பயன்படுத்த அனுமதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 18 பில்லியன் ரூபாவை மாத்திரமே மின்சாரசபை பயன்படுத்திய போதிலும் சுமார் 183 பில்லியன் ரூபா மீதமுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்? என சஞ்சீவ தம்மிக கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
