இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்
இந்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E - NIC) வழங்க எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weeraratne) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (14.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் இலத்திரனியல் மயமாக்கப்பட எதிர் பார்க்கப்ட்டுள்ளது.
அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால், அதில் குறைந்தது பாதியையாவது இந்திய உதவி மூலம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |