இங்கிலாந்தில் சகல கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் முடிவு
பிரித்தானியாவின் இங்கிலாந்தில் எஞ்சியுள்ள சகல கொரோனா கட்டுப்பாடுகளையும் இம்மாத இறுதியில் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) கூறியுள்ளார்.
நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிராந்தியத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு விதிகளின்படி, தொற்றுப் பரிசோதனைகளில் எதிர்மறை முடிவுகளை பெறுபவர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற நியதி உட்பட்ட கட்டுப்பாடுகள் மார்ச் 24ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஒரு மாத காலத்துக்கு முன்னரே இதனை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பொறிஸ் ஜோன்சன் கூறுகிறார்.
இந்த நிலையில் எதிர்வரும் 11 முதல் இரண்டு தடுப்பூசி போடப்பட்டவர்கள் இங்கிலாந்துக்கு நுழைந்த பின்னர் கொரோனா பரிசோதனைகள் எதுவும் எடுக்கத் தேவையில்லை என்ற நியதியும், அதேபோல முழுமையாக தடுப்பூசிபோடாத பயணிகள் இனிமேல் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படாமல் தொற்றுப் சோதனைகளை எடுத்தால் மட்டும் போதுமானது என்ற நியதியும் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
