அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் (Ruwan Senarath) தெரிவித்துள்ளார்.
தங்காலையில் (Tangalle) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும், பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.
கடந்த அரசாங்கமே பொறுப்பு
அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இது தொடர்பான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம்.
இதற்கான பொறுப்பைக் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன.
இந்தநிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.“ என ருவன் செனரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |