கடும் போருக்கு மத்தியிலும் உக்ரைனுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு அந்தஸ்து
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைகிறது உக்ரைன்
ரஷ்யாவின் கடும் தாக்குதல்களை எதிர் கொண்டுள்ள உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர்களாக சேர்வதற்கான முடிவை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen இது ஒரு வரலாற்று தருணம் எனவும், "ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல நாள்" என்று ட்வீட் செய்துள்ளார். "உங்கள் நாடுகள் எங்கள் ஐரோப்பிய குடும்பத்தின் ஒரு பகுதி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Today is a good day for Europe.
— Ursula von der Leyen (@vonderleyen) June 23, 2022
Congratulations to President @ZelenskyyUA President @Sandumaiamd and Prime Minister @GharibashviliGe
Your countries are part of our European family.
And today’s historic decision by Leaders confirms that. pic.twitter.com/lAkv8Bq5fs
மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று
உக்ரைன அரச தலைவர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் சுதந்திர நாடாக வரலாற்றில் "மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று" என்று இதனை குறிப்பிட்டுள்ளார். "ஐரோப்பாவை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை இது" என்றும் அவர் கூறினார், அத்துடன், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய தலைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது. இதன்போது, ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளராக விண்ணப்பித்திருக்கும் உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் வேட்பாளராக அங்கீகரிக்கப்படவுள்ளன.
ரஷ்யாவை கோபப்படுத்தும்
எனினும், மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் இணைவதற்கும் நெருக்கமாவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யாவை இந்த நடவடிக்கை கோபப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

