அமெரிக்கா இன்றி ஐரோப்பாவின் பாதுகாப்பு கனவில் தான்! NATO எச்சரிக்கை
அமெரிக்காவின் ஆதரவு இன்றி ஐரோப்பா தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என நினைத்தால் அது கனவுதான் என, நேட்டோ (NATO) பொதுச் செயலாளர் மார்க் ருட்டே கடுமையாக எச்சரித்துள்ளார்.
பிரசெல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அணுஆயுத திறன்
“ஐரோப்பிய ஒன்றியம் அல்லது முழு ஐரோப்பாவே அமெரிக்கா இல்லாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று யாராவது நினைத்தால், கனவு காணத் தொடருங்கள். அது சாத்தியமில்லை. எங்களால் முடியாது. நமக்கு ஒருவருக்கொருவர் தேவை” என்று அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உண்மையிலேயே அமெரிக்காவின்றி தனித்து பாதுகாப்பை மேற்கொள்ள விரும்பினால், பாதுகாப்புச் செலவுகளை 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டியிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தங்களது சொந்த அணுஆயுத திறனையும் உருவாக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் செலவாகும் என்றும் மார்க் ருட்டே எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |