அடுத்த அரச அதிபர் சஜித் - சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்
Parliament of Sri Lanka
Sajith Premadasa
Sri Lanka
President of Sri lanka
By Sumithiran
அடுத்த அரச அதிபர் சஜித்
நாட்டின் அடுத்த அரச அதிபராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர் ஏற்கனவே அடுத்த அரச அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இரகசிய வாக்கெடுப்பு
அரச அதிபர் பதவிக்கு வேறு எந்த கட்சியும் யாரையும் முன்னிறுத்தவில்லை. அரச அதிபர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு செல்லாமலேயே சஜித் பிரேமதாசவை அரச அதிபராக நியமிப்பதற்கான இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
