யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி நியமனம்
University of Jaffna
By Vanan
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று சனிக்கிழமை(25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பேரவை அனுமதி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் பதில் துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்