கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் : வெலிக்கடை சிறையில்...

Mahindananda Aluthgamage Lanka Sathosa Nalin Fernando Law and Order sl presidential election
By Sathangani May 30, 2025 09:00 AM GMT
Report

புதிய இணைப்பு

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (29) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதன்படி, இருவருக்கும் சிறைச்சாலை உடை அணிவிக்கப்பட்டு, தூங்குவதற்கு பாய் மற்றும் தலையணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதவிர, பிரதிவாதிகளான நளின் பெர்னாண்டோவுக்கு 4 இலட்சம் ரூபா அபராதமும், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 2 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேவேளை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இருவரும் நேற்று மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று (29)  மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் அமைதிக்காகவா போராடினார்...! சீண்டும் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் அமைதிக்காகவா போராடினார்...! சீண்டும் சரத் பொன்சேகா

கடூழிய சிறைத்தண்டனை

அதன்படி, முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் : வெலிக்கடை சிறையில்... | Ex Min Mahindananda And Nalin Prison Sentenced

இந்த தீர்ப்புகளிற்கு மேலதிகமாக குறித்த இருவருக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு 53 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் தாக்குதல் - வெளியான தகவல்

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் தாக்குதல் - வெளியான தகவல்

யாழ். சுன்னாகத்தில் அதிரடியாக கைது செயய்யப்பட்ட எழுவர்

யாழ். சுன்னாகத்தில் அதிரடியாக கைது செயய்யப்பட்ட எழுவர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022