விபத்தில் சிக்கி முன்னாள் சுகாதார அமைச்சர் உயிரிழப்பு!
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Accident
Death
By Pakirathan
மின்தூக்கி உடைந்து கீழே விழுந்ததன் காரணமாக முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பீ. சிறில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் மூலம் மூன்றாவது மாடிக்கு தனது சாரதியுடன் சென்று கொண்டிருந்த போது, மின்தூக்கி உடைந்து கீழே விழுந்துள்ளது.
உயிரிழப்பு
இந்த விபத்தினால் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சாரதி படுகாயமடைந்தனர், பின்னர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பீ. சிறிலுக்கு 89 வயதாகும்.
