அரசின் அவசர நடவடிக்கை- விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள துப்பாக்கிகள்
Sri Lanka
Gun Shooting
By Sumithiran
பயிர் பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பயிர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னைய சட்டங்கள் திருத்தப்பட்டு, அந்த உரிமங்களை வழங்குவதற்காக பயிர்ப் பரப்பை ஐந்து (05) ஏக்கராக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
இது குறித்து விளக்கமளித்த அமைச்சர், ஓராண்டில் பல்வேறு வன விலங்குகளால் அதிக அளவில் பயிர்கள் நாசமாவதால், அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி