விசித்திரமான வரியை விதித்த நியூசிலாந்து பிரதமர்..! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

New Zealand
By Pavan Oct 21, 2022 06:12 AM GMT
Report

நியூசிலாந்தில் பசுக்கள் மற்றும் ஆடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அதாவது, நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், 2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக ஆகிவிடும் என்று உறுதியளித்துள்ளார்.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டுக்குள் பண்ணை விலங்குகள் காரணமாக வெளியாகும் மீத்தேன் உமிழ்வை 10 சதவிகிதம் குறைக்கவும், 2050 க்குள் 47 சதவிகிதம் வரை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

விசித்திரமான வரியை விதித்த நியூசிலாந்து பிரதமர்..! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் | Farmers New Zealand Across Protest

இந்நிலையில், மாடுகள், ஆடுகள் போன்ற பண்ணை விலங்குகள் விடும் ஏப்பத்திற்கு, வரி விதிக்கும் திட்டம் ஒன்ரை முன் வைத்துள்ளார்.

நியூசிலாந்தில் மக்கள் தொகையை விட பண்ணை விவசாயத்திற்காக வளர்க்கப்படும் கால்நடை எண்ணிக்கைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்

விசித்திரமான வரியை விதித்த நியூசிலாந்து பிரதமர்..! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் | Farmers New Zealand Across Protest

இதனை எதிர்த்து, வியாழன் அன்று நியூசிலாந்து முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் வீதிக்கு வந்து மாடுகளின் ஏப்பம் மற்றும் பிற பசுமை இல்ல வாயு எனப்படும் சுற்று சூழலை பாதிக்கும் வாயு உமிழ்வுகள் மீது வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நியூசிலாந்து நாடு முழுவதும் உள்ள நகரங்களில் 50 க்கும் மேற்பட்ட போராட்டங்களை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம், காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பண்ணை வரியை அரசாங்கம் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை இது வரை உலகில் எந்த நாடுகளும் எடுக்காத நடவடிக்கையாக இருக்கும் என்றும், காலநிலைக்கு உகந்த பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகள் செலவை ஈடுசெய்ய முடியும் என்றும் அரசாங்கம் கூறியது.

சுற்று சூழலை பாதிக்கும் வாயுக்கள்

விசித்திரமான வரியை விதித்த நியூசிலாந்து பிரதமர்..! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் | Farmers New Zealand Across Protest

நியூசிலாந்தில் பண்ணை விவசாயம் மிகவும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. 10 மில்லியன் மாட்டிறைச்சிகான மாடுகள் மற்றும் பால் வழங்கும் மாடுகள் உள்ளன. 26 மில்லியன் செம்மறி ஆடுகள் உள்ளன. வெறும் 5 மில்லியன் மக்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் பண்ணை விலங்குகள் தான் உள்ளன.

எனவே, மனிதர்களை விட கால்நடைகள் காரணமாகத் தான் சுற்று சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. கால்நடைகளை ஏப்பம் விடுவதன் மூலம் வெளியிடப்படும் மீதேன் அளவு அதிகமாக உள்ளது.

ஆனால் சில விவசாயிகள் உத்தேச வரி உண்மையில் உணவு தயாரிப்பதில் குறைந்த திறன் கொண்ட நாடுகளுக்கு விவசாயத்தை மாற்றுவதன் மூலம் உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர்.

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016