சற்று முன்னர் பாரிய விபத்து - மற்றுமொரு சிறுவனும் பலி- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்தது (இரண்டாவது இணைப்பு)
Accident
Death
By Kiruththikan
(இரண்டாவது இணைப்பு)
வெலிகம பெலான பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஆபத்தான நிலையில் இருந்த மற்றுமொரு குழந்தை இன்று (03) உயிரிழந்துள்ளது.
7 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்படி, அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளது.
சற்று முன்னர் பாரிய விபத்து - 9 வயது சிறுவன் உட்பட இருவர் பலி..!
வெலிகம – பெலன பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் 9 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உட்பட 04 பேர் என தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி