மொரோக்கோ மற்றும் போர்த்துக்கல் போட்டியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்; வைரலான காணொளி!
உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பல சுவாரஸ்யமான விடயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், மொரோக்கோ மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று முழு உலக கால்பந்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மொரோக்கோ நபரின் செயல்
மொரோக்கோ மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றின் போது மொரோக்கோவை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த மைதானத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றியுள்ளார்.
அவரது சொந்த நாடு விளையாடிக்கொண்டிருந்தாலும், அவர் அந்த போட்டி நடைபெறும் மைதானத்தை பார்க்காமல் ரசிகர்களின் பக்கம் திரும்பி இருந்து தனது பாதுகாப்பு பணியை செய்திருக்கின்றார்.
பின்னர் மொராக்கோ அணி போர்த்துக்களை வெற்றி பெற்றபோது அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் காணொளி ஒன்றின் மூலம் வெளிவந்துள்ளது.
குறித்த காணொளி
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைத்து உதைபந்தட்ட ரசிகர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
The real hero was this Moroccan man. He works as a security in the stadium. His home country was playing a historic game and yet he gave the pitch his back to fulfill his duties of keeping us safe. You can see the emotions on his face when Morocco won. ❤️??❤️
— Mohammed Fahad Kamal (@mfk600) December 7, 2022
#FIFAWorldCup pic.twitter.com/VPQnVkhvhK
தனது நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியை விளையாடிக் கொண்டிருந்தாலும், தனது உணர்வுகளை கட்டுப்படுத்தி குறித்த போட்டியை பார்க்காமல் ரசிகர்களை பாதுகாக்கும் தனது கடமையை செய்யும் இவர்தான் உண்மையான மொரோக்கோ மனிதர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
