சிட்னியில் என்ஜின் வெடித்து தீ விபத்திற்குள்ளான விமானம் : தெய்வாதீனமாக உயர்தப்பிய பயணிகள்
சிட்னி விமான நிலையத்தில் (Sydney Airport ) விமான என்ஜின் வெடித்து தீப்பற்றி விமாமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (08) இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு (Brisbane) குவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று இன்று மதியம் ஒரு மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) புறப்பட்டுள்ளது.
விமானத்தின் என்ஜின்
புறப்பட்ட சில மணிநேரத்தில் விமானத்தின் வலது என்ஜின் வெடித்ததால் தீ பற்றி எரிந்த நிலையில் விமானம் மூன்றாவது ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைத்ததுடன் இந்த விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீ விபத்து
இந்த தீ விபத்தால் விமான நிலைய பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக விமான பயணி ஜார்ஜினா லூயிஸ் கருத்து தெரிவிக்கையில், "விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களுக்கு பிறகு விமானத்தில் பலத்த சத்தம் கேட்டது.
மேலும், பிறகு வலதுப்புற என்ஜினில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |