புலம் பெயர் தொழிலாளருக்கு அடித்தது அதிஷ்டம் - முதன் முதல் வழங்கப்பட்ட அனுமதி
Colombo
Manusha Nanayakkara
Sri Lanka
By Sumithiran
புலம்பெயர்ந்த தொழிலாளர்
இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் , முறையான வழிகளில் பணம் அனுப்புனர்கள் , மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் திட்டம் அண்மையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முதல் மின்சார வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தை இன்று வழங்கியுள்ளது.

மின்சார வாகன இறக்குமதி
புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போது இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி