வடபகுதி கடற்றொழிலாளர்களை ஆதரிக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி!

Sri Lankan Tamils Fishing India Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Shalini Balachandran Mar 03, 2024 04:50 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு வழங்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தகவலை அவர் வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூச்சற்ற நிலையில் தாயிடம் சென்ற சாந்தன்! கதறலுடன் வரவேற்ற தாய்

மூச்சற்ற நிலையில் தாயிடம் சென்ற சாந்தன்! கதறலுடன் வரவேற்ற தாய்

போராட்டம்

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் தெரிவித்த அவர், “தமிழக கடற்றொழிலாளர்கள் நவீன இராட்சத படகுகளின் துணையோடு தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளுடன் இலங்கையின் வடபிராந்திய கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்வளத்தை கொள்ளையிட்டுச் செல்வது தமிழர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் விடயம் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவையும் நாம் வழங்குவோம்.

வடபகுதி கடற்றொழிலாளர்களை ஆதரிக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி! | Fishing Issuse Jaffna

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும் காலநிலை மாற்றத்தாலும் கடற்றொழிலாளர்கள் மிக மோசமான நெருக்கடிகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் இந்திய குறிப்பாக தமிழக கடற்றொழிலாளர்களின் நூற்றுக்கணக்கான அதிநவீன படகுகள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி உட்புகுந்து மீன்குஞ்சிகளைக்கூட விட்டு வைக்காது அனைத்தையும் அள்ளிச் செல்வது மனிதாபிமான செயற்பாடாக இருக்காது.

இலங்கையின் கடற்படையினர் கடல் எல்லை பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் உள்நுழைந்து மீன்வளத்தை சுரண்டிச் செல்வது ஆச்சரியமாக இருப்பதோடு, இது இலங்கையின் ஆசிர்வாதத்தோடு நடக்கின்றதா என்ற நியாயமான சந்தேகமும் வலுக்கின்றது.

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்! ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்! ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்

கடற்றொழிலாளர்களுக்கிடையிலான பகைமை

மேலும், இன்னொரு பக்கம் வடபகுதி தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் தென்னிந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக மக்களுடனான எமது தொப்புள்கொடி உறவை வெட்டி எறிவதற்காகவும் இப்பிரச்சினை எரியும் நிலையில், இதற்கு சூழ்ச்சியாக பின்னால் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

அத்துடன், இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் ரோந்துப்பணிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்று பாராட்டப்படுகின்ற நிலையில் அதே கரிசனையையும் திறமையையும் வடக்கு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத அத்துமீறல்களை தடுப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

வடபகுதி கடற்றொழிலாளர்களை ஆதரிக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி! | Fishing Issuse Jaffna

அத்தோடு எது எப்படியோ இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமிழக முதல்வரும் தமிழக மீனவ சங்கங்களும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

அதேவேளை, தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முகமாக இலங்கை வடபகுதி மீனவ உறவுகள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் உட்பட அனைத்து செயற்பாடுகளுக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017