கொழும்பிலிருந்து டாக்காவிற்கு நேரடி விமான சேவை
கொழும்பு - டாக்கா இடையிலே நேரடி விமான சேவைகளை ஃபிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (17) முதல் கொழும்பு-டாக்கா நேரடி விமானங்களைச் சேர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஃபிட்ஸ் எயர் நிறுவனமானது தற்போது, கொழும்பிலிருந்து டுபாய், சென்னை மற்றும் மாலத்தீவு போன்ற மூன்று இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது.
சுற்றுலாத் தொழில் வளர்ச்சி
இந்நிலையில் ஃபிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனமானது தனது விமான சேவைகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து டாக்காவிற்கு நேரடி விமான சேவைகளை வழங்க தீர்மானித்தது.
அதன்பொருட்டு இந்த புதிய பாதை விரிவாக்கத்துடன், ஃபிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனமானது தற்போது நான்கு இடங்களுக்கு தனது விமான சேவைகளை வழங்கி வரும் வகையில் தனது சேவையை விரிவாக்கியுள்ளது.
மேலும் இந்த நேரடி விமான சேவையானது இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் தொழில்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |