மோதலுக்கு தயாராகிய வன்முறை கும்பலை மடக்கி பிடித்த காவல்துறையினர் - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
யாழ்.நகர் பகுதியில் மோதலுக்கு தயாரான வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேர் ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகர் பகுதிக்கு அண்மையில் இரண்டு வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் தமக்குள் மோதிக்கொள்ள தயாராக உள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
காவல்துறையினரை கண்டதும் , மோதலுக்கு தயார் நிலையில் இருந்தவர்கள் தப்பியோடியள்ளனர்.
ஐவர் கைது
தப்பியோடியவர்களை துரத்தி சென்ற காவல்துறையினர் அவர்களில் ஐவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களை மீட்டுள்ளதுடன் , தப்பியோடிய ஏனையவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
