சி.வி.விக்கி,மனோ உட்பட ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் ரணிலை சந்தித்தனர்
Mano Ganeshan
Ranil Wickremesinghe
Sri Lanka All Party Government
By Sumithiran
ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே தமது நோக்கமாகும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல தரப்பினருடன் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியின் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி