கனடாவில் தொடரும் கடும் பனிப்புயல்; மின்சாரம், தரை வழி மற்றும் வான் வழி போக்குவரத்து சேவைகளும் பாதிப்பு!
கனடாவில் தொடரும் கடுமையான பனிப்புயல் காரணமாக பல மாகாணங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாகாணத்திலும், பிரதேசங்களிலும் மாறி மாறி வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
குறித்த பனிப்புயல் காரணமாக பல பிரதேசங்களில் மின்சார மற்றும் போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு
கனடாவை அச்சுறுத்தும் பனிப்புயலின் தாக்கம் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையிலான நயாகரா போக்குவரத்து பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
350000 அதிகமான கனடியர்கள் மின்சாரத்தை இழந்து தவிப்பதாக கனடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உறைபனி மழை, வெள்ளம் குறித்த எச்சரிக்கைகளும் சில மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பல பகுதிகளில் 100 KM வேகத்தில் காற்று வீசும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
