குறைவடையும் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள்!
Food Shortages
Sri Lanka
Economy of Sri Lanka
By Dharu
மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மா ஆகிய அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.
விலைகள்
220 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது. 340 ரூபாவாக இருந்த பருப்பு கிலோகிராம் ஒன்றின் விலை 310 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
மேலும், 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி