இஸ்ரேலில் வேலைவாய்ப்பு - வெளியான எச்சரிக்கை அறிவித்தல்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Israel
National Health Service
Foreign Employment Bureau
By Pakirathan
இஸ்ரேலில் தாதியர் வேலைகளை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள இன்று (26) ஒரு குழுவினர் இஸ்ரேல் செல்லவுள்ள நிலையிலேயே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்கள்
அத்துடன், இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாகவே, இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
