உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வாவிற்கு விளக்கமறியல்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றையதினம் (09) அவரை காவல்துறை களப் படைத் தலைமையகத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.
இதன்படி, நெவில் சில்வா இன்று (10) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்டதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
2023 ஓகஸ்ட் மாதத்தில் முறைப்பாட்டாளர் ஒருவருக்கு சார்பாக செயற்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்திருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நெவில் சில்வாவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கபட்டிருந்தன.
அந்த விசாரணைகளில் உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வா கடத்தல் மற்றும் சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைத்தல் போன்ற சம்பவத்திற்கு உதவியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு 11 மணி நேரம் முன்
