சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை
வீதி விபத்தின் பின்னர் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் (Chunnakam) காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன் காவல்துறையினர் இரண்டு மாத குழந்தையை தூக்கி வீசியதாக எழுந்த குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
பணியிலிருந்து இடைநிறுத்தம்
இவ்வாறான பின்னணியிலேயே, காவல்துறை பரிசோதகர், காவல்துறை சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒருவர் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபரை கைது செய்ய சென்ற போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன்படி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த 4 காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |