அத்துகோரள எம்.பி கொலை - காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துகோரளவின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
