மாலியில் குண்டுவெடிப்பு - சிறிலங்கா படையினர் காயம்
மாலியில் வெடிகுண்டு வெடித்ததில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐநா அமைதி காக்கும் வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, கிடால் பகுதியில், டெஸ்ஸாலிட்டில் உள்ள ஐ.நா. முகாமில் இருந்து வடமேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில், தளபாட வாகன தொடரணிக்கு பாதுகாப்பை வழங்கிய கவசவாகனம் வெடிக்கும் சாதனத்தில் (IED) மோதியதில், அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாக அவர் கூறினார்.
அமைதி காக்கும் படையினருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவம் நடந்து சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் நடத்தியதில், இரண்டாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, அது வெற்றிகரமாக வெடிக்க வைக்கப்பட்டது என்று ஐநா செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
