மோசடிக்கும்பல் லண்டனில் கைவரிசை..!! தமிழர்களும் இலக்கு
மோசடிக்கும்பல் லண்டனில் கைவரிசை
மோசடிக்கும்பல் ஒன்று லண்டனில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் மத்தியில் கைவரிசை காட்டி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கையடக்க தொலைபேசிக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி குறுந்தகவல் ஒன்று மோசடியாளர்களால் அனுப்பப்படுகிறது.
அந்த குறுந்தகவலில், இணைய வழி ஊடாக வேலை வாய்ப்பு, சம்பளமாக வாராந்தம் 980 பவுண்ட் வழங்கப்படும் என தகவல் பரிமாறுகின்னர்.
இலகுவாக தொழில் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்றும், முன் அனுபவங்கள் தேவையில்லை எனவும் அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் விரும்பம் உள்ளவர்கள் இணைப்பை அழுத்துமாறு கூறி குறுந்தகவலுடன் இணைப்பு ஒன்றும் உள்ளடக்கப்படுகின்றது.
குறுந்தகவல்
அதற்கமைய விரும்பம் உள்ளவர்கள் இணைப்பை அழுத்தினால் அவர்களிடம் ஒரு தொகை பணம் செலுத்துமாறு கோரப்படுகிறது. அதனை நம்பி பணம் செலுத்தும் மோசடியாளர்களின் வலையில் பலர் சிக்கிக் கொள்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது குறித்த நபர்களால் வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதாகவும் இது தொடர்பான குறுந்தகவல்கள் பல தமிழர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பலர் இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறு பணம் பறிக்கும் மோசடியாளர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.