அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: மோசமாகும் நெருக்கடி நிலைமை! வெளியாகிய தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏதிர் வரும் நாட்களில் அதிகரிக்கும் என பெட்ரோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய நிலவரப்படி 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெற்றிக் தொன் பெட்ரோல் மற்றும் 800 மெற்றிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது.
அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை
ஆனால் அந்த அளவுகள் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, லிட்ரோ எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு தாங்கிக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த முடியாத காரணத்தினால் நேற்று ஆறாவது நாளாக கப்பலின் எரிவாயு தரையிறங்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
