அடுத்த மூன்று வாரங்களுக்கு பெட்ரோல் இறக்குமதி இல்லை! அரசாங்கம் கையை விரித்தது
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஜுலை 22 ஆம் திகதி வரை பெட்ரோலை இறக்குமதி செய்ய முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதி இருந்தாலும், பெட்ரோல் இறக்குமதியை அணுக முடியாது என்று செய்தி ஊடக பணியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
டீசல் இறக்குமதி
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,"இலங்கையில் தற்போது 11,000 மெட்ரிக் தொன் டீசல், 5,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், மற்றும் 800 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்ர்.
ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை 38,000 மெட்ரிக் தொன் டீசல் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், புதிய ஏற்றுமதி நாட்டிற்கு வரும் வரை தற்போதுள்ள டீசல் கையிருப்பு அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.