எரிபொருள் சிக்கலுக்கு புதிய தீர்வை காணும் அமெரிக்கா! கொண்டுவரப்படவுள்ள தடை
கலிபோர்னியா மாநிலத்தில் 2035 ஆம் ஆண்டுக்குப் பின் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே இந்த திட்டத்தை நடைமுறை செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
எரிபொருள் பாவனையற்ற புதிய வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு இந்த புதிய சட்டம் வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எரிவாயு மற்றும் மின்சார வாகனங்கள்
மேலும், 2035 ஆம் ஆண்டிற்கு பின்னர் எரிவாயு மற்றும் மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நோர்வே, நெதர்லாந்து, பிரான்ஸ், யுனைடெட் கிங்டம் மற்றும் டென்மார்க் உட்பட ஐரோப்பாவின் பல நாடுகள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட கலிபோர்னியா, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாத வாகனத் தொழிலை ஊக்குவிக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஆளுநர் கவின் நியூசோம் சுட்டிக்காட்டியுள்ளார்.

