முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இன்று (1.6.2024) அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalit Dharmasekhara ) தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை குறைக்க முடியாது
நேற்றையதினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், குறைக்கப்பட்ட பெற்றோல் விலையுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விலை 307 ரூபாயை எட்டினால் மட்டுமே பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |