இலங்கைக்கு முழுமையான ஆதரவு - இந்தியா உறுதியளிப்பு

Bandula Gunawardane Shri Nitin Jairam Gadkar Sri Lanka India
By Sumithiran Nov 04, 2022 12:28 AM GMT
Report

இலங்கையின் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து துறையை விரைவாக புனரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணை கிடைக்குமென போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீநிதின் கட்கரியை புதுடில்லியிலுள்ள போக்குவரத்து அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

போக்குவரத்துத்துறையில் ஒத்துழைப்பு

இலங்கைக்கு முழுமையான ஆதரவு - இந்தியா உறுதியளிப்பு | Full Support To Sri Lanka India Pledges

இலங்கையின் போக்குவரத்துத்துறை முன்னேற்றத்துக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இரு தினங்கள் தங்கியிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, இரண்டு நாடுகளினதும் போக்குவரத்துத்துறையில் ஒத்துழைப்புடனும் இணைந்தும் செயற்படுவது தொடர்பில் பல்வேறு வகைகளில் கவனம் செலுத் தியுள்ளனர்.

இலங்கையின் ரயில்வே துறை மற்றும் ரயில் பாதை கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஏனைய உட் கட்டமைப்பு வசதிகளை துரிதமாக புனரமைப்பு செய்வது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் ஒத் துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 எரிபொருள் மூலமான போக்குவரத்தில் கட்டுப்பாடு

[CS8NJ5[

இலங்கையின் போக்குவரத்துத் துறையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்திய போக்குவரத்து அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அதன்போது, எரிபொருள் மூலமான போக்குவரத்து செயற்பாடுகளை மட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம்தொடர்பில் இந்திய போக்குவரத்து அமைச்சர் கட்காரி இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தனவின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

போக்குவரத்துக்காக மின்சார உப யோகம், எரிவாயு ஆகியவற்றை உபயோகிப்பது தொடர்பிலும் அந்த விடயத்தில் இந்தியா பெற்றுக்கொண்டுள்ள சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் இந்திய அமைச்சர் கட்கரி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேருந்து வண்டிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இரு அமைச்சர்களுக் குமிடையிலான இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கவனம் செலுத்தப்பட்டு விடயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

மாற்று மின்சக்தி போக்குவரத்து

இலங்கைக்கு முழுமையான ஆதரவு - இந்தியா உறுதியளிப்பு | Full Support To Sri Lanka India Pledges

இதன்போது இந்திய போக்குவரத்து அமைச்சர் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர் பிலும் கனிம எரிபொருளில் தங்கியிருப்பதை மட்டுப்படுத்தி மாற்று மின்சக்தி போக்குவரத்து தொடர்பில் தமக்குள்ள அனுபவங்களை விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த அனுபவங்களை இலங் கையுடன் பகிர்ந்துகொள்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இந்திய அரசாங் கத்தின் ரெயில் இந்திய ரெக்னிக்கல் அன்ட் எக்கொனோமிக் சேர்விஸ் லிமிட்டட், இந்திய ரெயில்வே கன்ரக்ஷன் லிமிட்டட் மற்றும் ரெயில் விகாஸ் நாகம் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் புதுடில்லியிலுள்ள இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் நிலுக கந்துருகமுவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024