கஜேந்திரகுமார் கைது விவகாரம் - லண்டனில் பாரிய போராட்டம்..!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று கொழும்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த கைது நகர்வைக் கண்டித்து இன்று லண்டனில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அனைத்துலக ரீதியில் ஒருங்கிணையும் ஈழத்தமிழர்களின் போராட்டமே தாயகத்தில் மக்களுக்கான ஆத்ம பலத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் என்ற தொனிப்பொருளுடன் லண்டனிலுள்ள வெளிவிவகார அமைச்சகத்தின் முன்னால் ஈழத்தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இந்தப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த போராட்டத்தில் ஏனைய தமிழ் அமைப்புகளும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அடக்குமுறை
சிறிலங்கா அரசால் தொடர்ந்து தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை நிறுத்த பிரித்தானிய அரசாங்கம் தலையிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
