குளத்தில் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Vavuniya
Death
School Children
By Thulsi
குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் வவுனியா - மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மரணமடைந்தவர் வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவராவார்.
குறைந்தபட்ச வெப்பநிலை
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் வவுனியா - கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று முன்தினம் மாலை குளிக்க சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண் டிருந்த போது ஒரு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாமடுப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி