புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி
உக்ரைன் மீது புடின் முன்னெடுத்து வரும் தாக்குதல் மூன்றாவது உலகப் போரை துண்டும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், போருக்கு தயாராக இருப்பது அவசியம் என ஜேர்மனி எச்சரிக்கை செய்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி, ஐரோப்பாவை தாக்கக்கூடும் என்ற அச்சம் அதிகரிப்பதால் ஜேர்மனி 10 வார்த்தையில் மிகப்பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜேர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வெளியிட்ட எச்சரிக்கையில், "புடின் தாக்குதல் நடத்தினால், ஜேர்மனி போர் தொடுக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
ரஷ்யாவின் தாக்குதல்
2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைனில் தாக்குதல்களைத் துவக்கிய புடின், தற்போது மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பாக அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.
இது ஐரோப்பாவையும் தாக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தயார்நிலையை உறுதி செய்ய, ஜேர்மனி 2028 வரை வருகை செலவுகளை வருடத்திற்கு 80 முதல் 90 பில்லியன் யூரோ வரை உயர்த்த வேண்டும்.
பாதுகாப்பு நிலைமை
நமது பாதுகாப்பு நிலைமை மோசமாகும் சூழலில், ஜேர்மனியின் கடன் வரம்பில் மாற்றம் செய்யவேண்டும்.
பாதுகாப்புச் செலவுகளை சாதாரண பட்ஜெட்டிலிருந்து மேற்கொண்டால், அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
மேலும், ஜேர்மன் இராணுவம், உக்ரைனில் அமைதி பாதுகாப்பு குழுவில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
ஜேர்மனியின் இந்த புதிய நடவடிக்கைகள், பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதற்கான அடையாளமாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |