ரஷ்ய பிரஜையால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை (படங்கள்)
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, வரிசையில் நிற்காது கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சுற்றுலாப்பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அங்கு கூடியிருந்தவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹப்புத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தற்சமயம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ரஷ்ய பிரஜையின் நடவடிக்கையால், ஹப்புத்தளை நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

