வீடொன்றில் இருந்து இரண்டு பச்சிளம் பாலகர்கள் மீட்பு
வீடொன்றில் தமது இரண்டு பச்சிளம் பாலகர்களான சிறுமிகளை பெற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் கிடைத்த தகவலுக்கமைய காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறை
குறித்த சிறுமிகளை விட்டுச் சென்றதை அறிந்த அயலவர்கள் நேற்று (11) இரவு அம்பலாங்கொடை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இரு குழந்தைகளையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
2 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளனர். தற்போது காவல்துறையினரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெற்றோரை கண்டறிய வலைவீச்சு
இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
