துடைப்பத்தில் பறந்த இளம்பெண்! வைரலாகும் காணொளி
Viral Video
China
World
By Harrish
3 months ago
ஹாலிவுட் திரைப்படங்களில் மந்திர சக்திகளை கொண்டு நீண்ட துடைப்பத்தில் பறப்பதை போன்று இளம்பெண் ஒருவர் சாகசம் செய்துள்ளமை ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, சீனாவை சேர்ந்த வான்டி வாங் என்னும் பெண்ணே இவ்வாறான சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.
குறித்த பெண் வானில் பறந்து சாகசத்தில் ஈடுபடும் 'பாரா கிளைடிங்'கில் தேர்ச்சி பெற்றவராக விளங்குகிறார்.
வைரலாகும் காணொளி
இந்த நிலையில், பனி மலை ஒன்றிற்கு அவர் சூனியக்காரிபோல வேடமணிந்து தன்னுடைய உடலில் பாராசூட் ஒன்றை பொருந்தி கொண்டு துடைப்பத்தில் ஏறி வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.
இது தொடர்பான காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 20 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்