சிறிலங்காவிற்கு டொலர்களை வழங்க தயாராகும் தமிழர் பேரவை..! விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Tamil diaspora
By Kanna Aug 24, 2022 07:42 AM GMT
Report

சிறிலங்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு, நல்லாட்சி அரசாங்கத்தின் போது தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக தகவலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.  

அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிறிலங்காவிற்கு டொலர்களை வழங்க தயாராகும் தமிழர் பேரவை..! விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை | Global Tamil Forum Giving Dollars To Srilanka

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " 2016ம் ஆண்டு தென்னிலங்கையில் வெள்ளம் ஏற்பட்டிருந்த போது, உலகத் தமிழர் பேரவை சிங்கள மக்களுக்கு பெரும் உதவிகளை வழங்கியது.

ஆனால் கடந்த ஆண்டு இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுவாச கருவிகளை வழங்கிய போது, நாங்கள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் அதனை பெற்றுக் கொள்ள இலங்கை அதிகாரிகள் மறுத்தார்கள். இதனால் பல மரணங்கள் சம்பவித்தன. அதற்கு அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கையில் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை காரணமாக வருடாந்தம் 300 மில்லியன் டொலர்கள் அளவில் அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலர் ஜேர்மனி போன்ற நாடுகளில் பில்லியனியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

ஜெனீவாவை சமாளிக்க தடை நீக்கம்

சிறிலங்காவிற்கு டொலர்களை வழங்க தயாராகும் தமிழர் பேரவை..! விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை | Global Tamil Forum Giving Dollars To Srilanka

முன்னைய அரசாங்கத்தினால் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் நீக்கப்பட்டது.

ஜெனீவா மனித உரிமை பேரவையின் மாநாடு அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம்" எனக் குறிப்பிட்டார்.

குளோபல் தமிழ் மன்றம் உட்பட ஆறு அமைப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 316 பேர் மீதான தடை சமீபத்தில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


YOU MAY LIKE THIS 



ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026