மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை - இன்றைய விற்பனை நிலவரம்
நாட்டில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தங்க விலையும் நாளாந்தம் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக சரிவடைந்திருந்த தங்கத்தின் விலையானது, இரு நாட்களாக சற்று அதிகரித்திருந்ததுடன், இன்றையதினம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 592,435 ரூபாவாக காணப்படுகின்றது.
முழு விபரம்
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,900
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,200
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,160
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,300
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,290
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,300
தங்க வர்த்தகர்கள் சங்கம்
நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த காலங்களில் பாரிய மாற்றங்களின்றி உள்ளதாக தேசிய தங்க வர்த்தகர்கள் சங்கம் கூறியுள்ளது.
இருப்பினும் தங்கத்தின் விலையில் நாளாந்தம் சிறிதளவிலான அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு
அதேசமயம், இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் 146 ஆயிரம் முதல் 148 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 167 ஆயிரம் ரூபாய் முதல் 169 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
