கோவை விமான நிலையத்தில் பாரிய தங்க கடத்தல் முறியடிப்பு
Tamil nadu
Coimbatore
Gold smuggling
By Sumithiran
தங்கம் பறிமுதல்
தமிழகத்தின் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணியிடமிருந்து 1.83 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தங்கத்தை கொண்டு வந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரகம், ஷார்ஜாவில் இருந்து 3.5 கிலோ நிறையுள்ள, 1.83 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து கொண்டு வந்த ஏழு பயணிகளை திங்கட்கிழமை கைது செய்தது.
கேரளாவின் கோழிக்கோடு
எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இவர்களில் இருந்து பிடிபட்டார். கைது செய்யப்பட்ட பயணி கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரோஸ் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டார்.
அவர்களிடமிருந்து இடுப்பு பட்டி, மற்றும் வளையல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

