யாழ். கொழும்பு தொடருந்து சேவை : வெளியான மகிழ்ச்சி தகவல்
கொழும்பு கோட்டை (Fort) தொடக்கம் யாழ். காங்கேசன்துறைக்கிடையிலான (Kankesanthurai) இரவு தபால் தொடருந்து சேவை மொரட்டுவையில் இருந்து தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த தொடருந்து சேவையானது நேற்று (14.02.2025) இரவு முதல் சேவையை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department - Sri Lanka) தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை வரை செல்லும் இந்த தொடருந்து சேவையை வெள்ளவத்தையில் இருந்து ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இரவு தபால் தொடருந்து சேவை மொரட்டுவையில் இருந்து தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இரவு அஞ்சல் தொடருந்து
அதன்படி, மொரட்டுவ தொடருந்து நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு அஞ்சல் தொடருந்து கல்கிஸ்ஸை - தெகிவளை மற்றும் வெள்ளவத்தை தொடருந்து நிலையங்களில் நின்று கோட்டை தொடருந்து நிலையத்தை அடைந்து இரவு 8.00 மணிக்கு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படுமென குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அவிசாவளையில் (Avissawella) இருந்து கஹவத்தை (Kahawatta) வரையிலான முன்மொழியப்பட்ட தொடருந்து பாதையின் நிர்மாணத்தை விரைவுபடுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதித் தலைமைப் பொறியாளர் பி.ஜே. பிரேமதிலக்க இரத்தினபுரி (Ratnapura) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் உரையாற்றும் போதே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடருந்து பாதையின் முதல் கட்டம் அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.
தொடருந்து பாதையின் முதல் கட்டம்
இரண்டாம் கட்டம் இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையிலும், மூன்றாம் கட்டம் எம்பிலிப்பிட்டிய, சூரியவெவ மத்தள ஊடாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையிலும் நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரேமதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
இதில் அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையிலான பகுதியின் அவிசாவளையிலிருந்து குருவிட்ட வரையில் தற்போது அளவீடுகள் முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)